மத்திய அரசு ஊழியர்களுக்கு 46% DA உயருமா?
மத்திய அமைச்சரவையின் DA மீதான ஒப்புதல் கிடைக்குமா?
சம்பள உயர்வு மற்றும் நிலுவைத்தொகை அடுத்த மாதமாவது கிடைக்குமா?
இது போன்ற ஏராளமான கேள்விகள் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர்கள் மத்தியில் நிலவுகிறது !
இதற்கான பதிலை தேடுவதே இந்த பதிவின் நோக்கம்!
வணக்கம் நண்பர்களே!
கடந்த வியாழன் அன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் 4 சதவீத அகவிலைப்படி உயர்வுக்கான ஒப்புதல் கிடைக்கும் என அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது!
பல்வேறு காரணங்களால் இந்த அஜெண்டா பாயிண்ட் ஒத்திவைக்கப்பட்டது!
அடுத்த மத்திய அமைச்சரவை கூட்டம் அடுத்த வியாழன் நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது! அப்போது மத்திய அரசு ஊழியர்கள், பென்சனர்கள், பேமிலி பென்சனர்களுக்கு கூடுதலாக 4% DA கடந்த ஜூலை 2023 முதல் உயர்த்த ஒப்புதல் வழங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது!
ஒரு வேளை 12ம் தேதி கூட்டம் நடைபெறாமல் போனால், அடுத்த நடவிருக்கும், அநேகமாக October 19-ம் தேதி அன்று உறுதியாக ஒப்புதல் கிடைக்கும் என நம்பலாம்!
இதுவே இப்போதைய உண்மை நிலவரம்!
எது எப்படியோ! இந்த DA ஊதிய உயர்வு கடைநிலை ஊழியர் முதல் உயர் அதிகாரிகள் வரை அனைவருக்குமானது! இதில் எந்த தவறும் நடக்க வாய்ப்பே இல்லை! கூடிய விரைவில் மத்திய அரசு, ஜூலை முதல் 42 சதவீதமாக உள்ளதை 4 சதவீதம் உயர்த்தி 46 Percent DA உயர்வு வழங்கும் என உறுதியாக நம்புவோம்!
அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டபின் பைனான்ஸ் மினிஸ்ட்ரி முறையான ஆணைகளை பிறப்பிக்கும்! அதன் பின் அனைவருக்கும் சம்பளம் மற்றும் பென்சன் உயர்த்தி வழங்கப்படும்! அத்துடன் 3 மாத நிலுவைத்தொகையும் கிடைக்கும்!
இரண்டு மாத அரியர்ஸ் என்பது போய், மூன்று மாத அரியர்ஸ் ஆகா மாறிவிட்டது!
உயர்த்தப்பட்ட DA அக்டோபர் மாத சம்பளத்தில் வந்து விடும்! ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்திற்கான தொகை அரியர்ஸ் தொகையாக கணக்கிடப்பட்டு தனியாக வழங்கப்படும்!
ஓர் அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியர் எவ்வளவு அதிகம் பெற வாய்ப்புள்ளது என பார்ப்போம்!
ஓர் அரசு ஊழியர் வாங்கும் அடிப்படை சம்பளம் 49000 எனக்கொள்வோம்! அவருடைய Pay Level- 6 எனவும், Transport Allowance 3600 வாங்குபவர் என்றால், அவர் பெறப்போகும் ஊதிய உயர்வு மற்றும் நிலுவை தொகை எவ்வளவு என்பதை எளிதாக பார்தது விடலாம்!
July, August மற்றும் September மாதத்தில் Dearness Allowance + Transport Allowance சேர்த்து 20,580 plus Transport Allowance 5112 என 25,692 பெற்றிருப்பார்!
அவர் அடுத்த மாதம் October-ல், Dearness Allowance + Transport Allowance சேர்த்து 27,796 பெறுவார்!
ஒரு மாதத்திற்கான உயர்த்தப்பட்ட தொகை 2,104.
மூன்று மாத அரியர் தொகையாக 6312 அவர் பெறுவார்!
அதே போன்று, மத்திய அரசு பென்சநறுக்கு எவ்வளவு அதிகரிக்கும் என்பதையும் அரியர்ஸ் எவ்வளவு வர வாய்ப்புலத்தை காணலாம்!. மத்திய அரசு ஓய்வூதியரின் Basic Pension 25,250 எனக்கொள்வோம்!
July, August மற்றும் September மாதத்தில் Basic Pension plus Dearness Allowance சேர்த்து 35,855 பெற்றிருப்பார்!
அவர் அடுத்த மாதம் October-ல், Basic Pension plus Dearness Allowance சேர்த்து 36,856 பெறுவார்!
ஒரு மாதத்திற்கான உயர்த்தப்பட்ட தொகை 1,010.
மூன்று மாத அரியர் தொகை 3,030
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர்கள் தங்களது உயர்த்தப்பட்ட ஊதியம் மற்றும் பென்ஷன் தொகையுடன், அரியர்ஸ் தொகையினை கணக்கிட Online கால்குலேட்டர் உள்ளது. கீழே Description-ல் link கொடுக்கப்பட்டுள்ளது.