மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப்படி 30 சதவீதமாக உயர்கிறது?
Central Government Staff எல்லோரும் இந்த வருஷம் ரொம்ப சந்தோசமா இருக்க போறாங்க!
ஏன்னு கேக்குறீங்களா?
இரண்டு விஷயம் இருக்கு!
ஒன்னு DA 4 Percent அதிகரிக்கப் போகுது!
அடுத்தது HRA 30% உயரப்போகுது!
இந்த இரண்டு விஷயத்தை பத்தித் தான் இந்த விடீயோவில பார்க்கப்போறோம்!
Skip பண்ணாம முழுசா பாருங்க!
பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க!
கண்டிப்பா பண்ணுவீங்க!
வணக்கம் நண்பர்களே!
DA 50% தாண்டத்தான் போகுது! | HRA 30% உயரத்தான் போகுது!
Central Government employees எல்லோரும் 7th Pay Commissoin Recommendation அடிப்படையில் தான் இன்று வரை HRA வாங்கிட்டு இருக்காங்க!
இந்திய நகரங்களை X, Y, Z என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு…
9 Percent, 18 Percent, 27 Percent என ஊழியர்களின் அடிப்படை சம்பளத்திலிருந்து HRA கணக்கிட்டு வழங்கி வரது நம்ப எல்லோருக்கும் நல்லாவே தெரியும்!
இந்த விகிதங்கள X பிரிவு நகரங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 30 சதவீதம், Y பிரிவு நகரங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 20 சதவீதம் மற்றும் Z பிரிவு நகரங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 10 சதவீதம் என திருத்தப்பட்டு அவர்களின் அடிப்படை சம்பளத்திலிருந்து அடுத்த வருடம் வழங்கப்போறது கிட்டத்தட்ட உறுதியாருச்சி!
ஜனவரி 2024 க்கான DA 50 Percent தாண்டும் போது, 1 ஜனவரி 2024 லிருந்து அவரவர் basic pay அடிப்படையில் HRA கூடுதலாக கணக்கிடப்பட்டு வழங்கப்படும்!
உயருது…உயருது…சொல்றீங்க…எவ்வளவு உயருதுன்னு சொல்ல மாற்றிங்கன்னு தான கேக்குறீங்க!
சொல்றேன்…நிச்சயமா சொல்றேன்! நல்லா புரியும் படி சொல்றேன்!
ஒரு மத்திய அரசு ஊழியர் அவர் வேலை செய்யும் அலுவலகம் எங்கு அமைந்துள்ளது என்பதை வைத்துதான் அவருக்கு எவ்வளவு HRA வழங்கவேண்டும் என தீர்மானிக்கிறாங்க!
இப்போ ஒரு மத்திய அரசு ஊழியர் சென்னையில் வேலை செய்பவராக இருந்தால் அவருக்கு அவருடைய அடிப்படை சம்பளத்தில் இருந்து 27% லிருந்து 30% ஆக உயர்த்தி வழங்கப்படும்.
ஒருவேளை, அவரே மதுரையில வேலை செய்தால் அவருக்கு அவருடைய அடிப்படை சம்பளத்தில் இருந்து 18% லிருந்து 20% ஆக உயர்த்தி வழங்கப்படும்.
அவரே வாடிப்பட்டியில இருக்குற போஸ்ட் ஆபீஸ்-ல வேலை செய்பவரா இருந்தால் அவருக்கு அவருடைய அடிப்படை சம்பளத்தில் இருந்து 9% லிருந்து 10% ஆக உயர்த்தி வழங்கப்படும்.
அவரு எந்த Pay லெவல்ல இருந்தாலும் அவருடைய அடிப்படை சம்பளத்த வைத்துத்தான் கணக்கு பண்ணுவாங்க! உதாரணத்திற்கு, அவருடைய அடிப்படை சம்பளம் 40,000 ன்னு வச்சுக்கலாம்!
சென்னைன்ன – ரூ.10,800 லிருந்து ரூ.12,000 மாசாமாசம் கூடுதலா வாங்குவாரு!
மதுரைன்ன – ரூ. 7,200 லிருந்து ரூ.8,000 வாங்குவாரு!
வாடிப்பட்டின்ன – ரூ. 3600 லிருந்து ரூ.4000 கூடுதலா மாசாமாசம் கிடைக்கும்!
OK-வா!
இப்போ உங்க மனசுல ஒரு கேள்வி வரும்!
தமிழ் நாட்டுல எந்தந்த ஊருக்கு எவ்வளவு சதவீதம்ன்னு தான கேக்குறீங்க?
விபரமா சொல்றேன்!
30 சதவீதம் HRA பெற தகுதி உள்ள நகரங்கள் X Class Cities என சொல்றாங்க! தமிழ்நாட்டில் சென்னை மட்டுமே X கிளாஸ் சிட்டி பிரிவில் வருது!
20 சதவீதம் HRA பெற தகுதி உள்ள நகரங்கள் Y Class Cities என அழைக்குறாங்க! அதுல Puducherry உட்பட Salem, Tiruppur, Tiruchirappalli, Madurai, Erode என 5 நகரங்கள் இருக்கு!
10 சதவீதம் HRA பெற தகுதி உள்ள நகரங்கள் Z Class Cities பிரிவில வருது!
சி பிரிவு நகரங்கள் என்னென்னு பார்த்தீங்கன்னா…
மேல குறிப்பிட்ட X மற்றும் Y நகரங்களை தவிர மற்ற அனைத்து நகரங்களும் சி பிரிவின் கீழ் வருதுங்க!
இப்போது புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்!
லெவல் 1-லிருந்து லெவல் 5 வரை மூன்று விதமான HRA தொகையுடன் கொண்ட அட்டவணை பாருங்கள்! உங்கள் அடிப்படை சம்பளத்தை தேர்வு செய்து புதிய உயர்த்தப்பட்ட வீட்டு வாடகை படி அறிந்து கொள்ளுங்கள்!