அக்டோபர் மாதம் பாதி கடந்தும், DA and DR உயர்வுக்கான அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை!
7வது சம்பள கமிஷன் பரிந்துரைத்த விதிமுறையின் அடிப்படையில், இந்த 2023 வருடம் வழங்கப்பட வேண்டிய இரண்டாவது தவணை அகவிலைப்படி சதவீதம் 4 என கணக்கிடப்பட்டுள்ளது!
2016 முதல் கணக்கிடப்பட்டு வழங்கி வந்த அதே கணக்கீட்டு முறையினை பயன்படுத்தி, ஜூலை 2023 முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படி DA உயர்வை கணக்கிட்டு பார்க்கும் போது நான்கு சதவீதம் உயர்வு என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது!
பல வருடங்களாக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் நம்பகத்தன்மை கொண்ட ‘Swamys News’ நான்கு சதவீத DA உயர்வினை உறுதி செய்துள்ளது!
ஏற்கனவே நாங்கள் வெளியிட்டு இருக்கும் வீடியோவில், மிக தெளிவாக July 2023 DA உயர்வினை கணக்கிட்டு வெளியிட்டு இருக்கிறோம்!
42 லிருந்து 46 சதவீதமாக எப்படி DA உயர்கிறது என்பதை, மத்திய அரசு வெளியிடும் AICPIN புள்ளிகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட அட்டவணையினை பாருங்கள்!
Month/Year |
AICPIN 2016 |
AICPIN 2001 |
12 Months Total |
12 month Average |
Approximate DA% |
Jan 2023 |
132.8 |
382 |
4489 |
374.06 |
43.11 |
Feb 2023 |
132.7 |
382 |
4511 |
375.91 |
43.81 |
Mar 2023 |
133.3 |
384 |
4532 |
377.66 |
44.48 |
Apr 2023 |
134.2 |
386 |
4551 |
379.22 |
45.05 |
May 2023 |
134.7 |
388 |
4567 |
380.59 |
45.56 |
Jun 2023 |
136.4 |
393 |
4588 |
382.32 |
46.23 |
ஒவ்வொரு மத்திய அமைச்சரவை கூட்டம் நடக்கும் போது DA மீதான ஒப்புதல் கிடைக்கும் என பல லட்சம் பயனாளர்கள் எதிர்பார்த்து நடக்காமல் போனதால் விரக்தியில் உள்ளனர்!
இந்த எதிர்பார்ப்பினை பல ஊழியர் சங்கங்கள் மற்றும் கூட்டமைப்புகள் மத்திய நிதி அமைச்சகத்துக்கு கடிதம் எழுதி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது!
அரசு அதிகாரிகள் தரப்பில், செப்டம்பர் மாத சம்பளம் மற்றும் பென்சன், 42% DA மற்றும் DR-வுடன் வழங்கப்பட்டுவிட்டது!
வரும் வாரத்தில் ஜூலை 2023 DA உயர்வுக்கான மத்திய அமைச்சரவை ஓப்புதல் நிச்சயம் கிடைத்து விடும்! வரும் அக்டோபர் மாத சம்பளம் மற்றும் பென்சனில் உயர்த்தப்பட்ட கூடுதல் அகவிலைப்படி வழங்கப்படும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்!
மத்திய அமைச்சரவை கூட்டம் அடுத்த வாரம் புதன் அல்லது வியாழன் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது! அப்போது, 4 சதவீதம் DA மற்றும் DR உயர்வுக்கு ஒப்புதல் கிடைக்கக்கூடும்.
மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டு, அது அதிகாரபூர்வமாக அறிவித்த பின், கூடுதல் அகவிலைப்படி உயர்வு ஜூலை 1, 2023 முதல் அமலுக்கு வரும். சுமார் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்!
குறைந்தபட்ச DA மற்றும் DR உயர்வுக்கான ஒரு சிறிய கணக்கீடு:
- 18000 x 42% = 7560
- 18000 x 46% = 8280
- DA உயர்வு = 720
- 9000 x 42% = 3780
- 9000 x 46% = 4140
- DR உயர்வு = 360
7வது சம்பள கமிஷன் அமைந்த பின், அகவிலைப்படி சதவீத ஏற்றத்தை பின்வரும் அட்டவணை மூலம் எளிதாக அறியலாம்!
Month/Year |
DA% |
Month/Year |
DA% |
Month/Year |
DA% |
Jul 2023 | 46% | Jul 2020 | 17% (24%) | Jul 2017 | 5% |
Jan 2023 | 42% | Jan 2020 | 17% (21%) | Jan 2017 | 4% |
Jul 2022 | 38% | Jul 2019 | 17% | Jul 2016 | 2% |
Jan 2022 | 34% | Jan 2019 | 12% | Jan 2016 | – |
Jul 2021 | 31% | Jul 2018 | 9% | ||
Jan 2021 | 17% (28%) | Jan 2018 | 7% |