மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு எப்போது வரும்?
2022-23 நிதியாண்டுக்கான போனஸை மத்திய அரசு எப்போது அறிவிக்கும்?
Productivity Linked Bonus மற்றும் Ad-Hoc போனஸ் குறித்து அமைச்சரவை குழு எப்போது ஒப்புதல் அளிக்கும்?
மத்திய அரசு ஊழியர்களின் Group C மற்றும் Group B பிரிவில் Gazetted அல்லாத ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு 30 நாள் உற்பத்தித்திறன் அல்லாத இணைப்பு போனஸை வழங்கி வருகிறது!
இந்த போனஸ் எந்தவொரு PLB போனஸ் திட்டத்தின் கீழ் வராத, மத்திய துணை ராணுவப் படைகள் மற்றும் ஆயுதப்படை வீரர்களுக்கும் சேர்த்து வழங்கப்படுகிறது! பொதுவாக, இந்த போனஸ் குறித்த அறிவிப்பு அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும். இருப்பினும், வரும் ஆண்டுக்கான போனஸ் குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
இதன் எதிரொலியாக, 2022-23 ஆம் ஆண்டிற்கான போனஸை, தகுதி வாய்ந்த அனைத்து ஊழியர்களுக்கும் பண்டிகை காலம் தொடங்குவதற்கு முன்பு வழங்க வேண்டும் என்று பல்வேறு மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் கூட்டமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன!
அமைச்சரவையின் ஒப்புதலைத் தொடர்ந்து, எதிர்வரும் விழாக்கால பண்டிகைகளை சிறப்பாக குடும்பத்துடன் கொண்டாடும் விதமாக, மத்திய அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!
மத்திய அரசு ஊழியர்களுக்கான PLB அல்லாத Ad-Hoc Bonus கணக்கிட, போனஸ் உச்சவரம்பு ரூ.7,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது Bonus கணக்கீட்டில் சராசரி ஊதியம் ரூ.7,000 என்றால், கணக்கீடு பின்வருமாறு இருக்கும்: 7000 x 30 / 30.4 = 6907.89.
எனவே, ரூ.6908 என்பது 30 நாட்களுக்கு உண்டான Bonus தொகையாகும். 2022-23 ஆம் ஆண்டிற்கான போனஸை பெற, ஊழியர்கள் மார்ச் 31, 2023 நிலவரப்படி பணியில் இருந்திருக்க வேண்டும்.
Central Govt Ad-Hoc Bonus Announcement Dates!
2022-23 | 30 | 17.102023 |
2021-22 | 30 | 06.10.2022 |
2020-21 | 30 | 18.10.2021 |
2019-20 | 30 | 04.10.2020 |
Railway Bonus Announcement Dates!
2022-23 | 78 | 18.10.2023 |
2021-22 | 78 | 12.10.2022 |
2020-21 | 78 | 06.10.2021 |
2019-20 | 78 | 22.10.2020 |